siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இரத்தினபுரத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 11 வயது  சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன்  மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த மாணவன்  பலியாகியுள்ளமை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

சனி, 29 டிசம்பர், 2018

அமரர் விநாசித்தம்பி ராஜேஸ்வரி,1ம் நினைவஞ்சலி,.30.12.18.

           உதிர்வு : 10 01  2018           திதி -30..12.2018 யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின்   திதி -30..12.2018 ஞாயிற்ருக்க கிழமை  அன்று   அவரது இல்லத்தி  நனைபெறும்   அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம் ...

செவ்வாய், 25 டிசம்பர், 2018

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் வடக்கில் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை  நேற்று வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களோ மோசமாகப்  பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில், 11,688 குடும்பங்களைச் சேர்ந்த , 38,534 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில்,...

இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தங்காலையில் நால்வர் பலி

தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இங்கு...

திங்கள், 24 டிசம்பர், 2018

பலர் பதிப்பு முகாமைத்துவ நிலையம் தேரிவித்து தெவெள்ளத்தில்ரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 9,475 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 3,338 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான...

சனி, 22 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் திரு சற்குணநாதன் சஞ்ஜீகரன் 20.12.18

பிறப்பு11 MAY 1987 -இறப்பு-20 DEC 2018 யாழ். மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சஞ்ஜீகரன் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், மகேந்திராஜா கிருசாந்தி தம்பதிகளின்  அன்பு மருமகனும், பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும், சச்சின், பவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சனாத்கரன்,...

வெள்ளி, 21 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் திரு தர்மலிங்கம் சசிதரன் (பாபு)19.12.18

பிறப்பு-   22 NOV 1968     இறப்பு 19 DEC 2018      யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் (Zürich)சூரிச்ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்(கள் 19-12-18 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார்,  காலஞ்சென்ற தர்மலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விமலதாசன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,  சசிகலா, ஸ்ரீதரன்(கோபி)...

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் காலநிலை மாற்றம்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.  காலை ஏழு மணியை கடந்தும் கிளிநொச்சியில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுவதாக  தெரிவித்தள்ளார்.  எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக்...

விபத்தில் ஒட்டுசுட்டானில் காயமடைந்திருந்த மாணவன் மரணம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன்  சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில்   மோட்டார் சைக்கிளில் சென்றசமயம் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம்  நடைபெற்றுள்ளது. விபத்தில்...

திங்கள், 17 டிசம்பர், 2018

வங்கி முகாமையாளர் மீது யாழில் வாள் வெட்டு தாக்குதல்

:யாழில் வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் புங்கன் குளம் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கி முகாமையாளர் வீட்டிற்குச் சென்ற ஆவா குழுவினர், வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கியதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான காரையும் அடித்து  நொறுக்கியுள்ளனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தாயின் நகையை திருடி யாழில் காதலனிடம் கொடுத்த காதலி

சமூக சீர்கேடு:தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை யாழ். வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை பகல் வேளை வீட்டிலிருந்த மனைவியின் நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு  செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டின் உரிமையாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட...

மாணவி யாழில் மர்ம காய்ச்சலாலில் மரணம்

:யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் 15.12.2018. இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே  உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

புதிய திட்டம் புத்தர் சிலையும் முளைக்கும் மடு மாதாவுக்கு வந்த ஆபத்து

மடுத்திருத்தலத்தை அரசாங்கத்தின் புனித பிரதேசமாக்கும் முயற்சி தொலை நோக்கு பார்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்  தெரிவித்துள்ளது. இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்… இலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட...

வடமராட்சியில் மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்தார்

:இரவுநேரம் வீட்டினுள் நுழைந்து திருடுவதற்கு முயன்ற திருடர்களிற்கு வீட்டு உரிமையாளர் வைத்த பொறியில் ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளார். மற்றைய மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டான். இந்த சம்பவம் விடத்தற்பளை பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. வீட்டு வளவிற்குள்- இருளுக்குள்- நால்வர் மறைந்து நிற்பதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனே சுதாகரித்த...

இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் சூறாவளி

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு  70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அது, மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும்...

வெள்ளி, 14 டிசம்பர், 2018

விபத்து வடமராட்சி நெல்லியடியில் ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார். முச்சக்கரவண்டி ஒன்றும் துவிசக்கர வண்டி ஒன்றும்  மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளார்.  நெல்லியடி பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் ...

மர்ம காய்ச்சலால்யாழில் பாடசாலை மாணவன் மரணம்

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே  உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

செவ்வாய், 11 டிசம்பர், 2018

மரண அறிவித்தல் அமரர் ஆறுமுகசாமி சின்னம்மா:11:12:18

மலர்வு:10 ஏப்ரல். 1940,-:உதிர்வு : 11, டிசம்பர்  2018     யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்,  ஜெர்மனி Böblingen மற்றும் ஜெர்மனி எசன்ஆகிய இடங்களில்   வசித்து  வந்த அமரர் ஆறுமுகசாமி   சின்னம்மா அவர்கள் 11,12,-2018 செவ்வாய்க் கிழமை  அன்று இறைபதம் அடைந்தார்.      அன்னார் அமரர் ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும் ஆவார்  காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு...

திங்கள், 10 டிசம்பர், 2018

யாழில் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை  எழுதி செல்கிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் க.பொ.த. சாதாரண பரீட்சை  எழுதி வருகிறார். இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்கானார். இதையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு...

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திறக்கப்பட்டன இரணைமடுக் குளத்தின் ஆறு வான்கதவுகள்

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில்  திறக்கப்பட்டன. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05  அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இன்று...

வெள்ளி, 7 டிசம்பர், 2018

பண்டாரவளை இரண்டு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி

பண்டாரவளை நகரில் வீதியைக் கடக்க முயன்ற போது முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.06.11.2018.. இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரவளை – இனிகம்பெத்த பிரதேசத்தை  சேர்ந்த 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து இடம்பெறும் போது அந்த பெண்ணுடன் பயணித்த மற்றைய நபர் காயமடைந்து பண்டராவளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது...

ஒரு மணி நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரித்த இளைஞன்

த்ன்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.காத்தான்குடி  முதலாம் குறிச்சி  ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு குறித்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார்.மின்சாரத்தில்  இயங்கும் வகையில்  கண்டுபிடித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம்...

தனது மகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  நேற்று மாலை குறித்த சடலத்தை பொலிஸார்  மீட்டுள்ளனர்.  வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார்.  இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை க ண்டுபிடிக்கபட்டது. பின்னர் தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்...

வியாழன், 6 டிசம்பர், 2018

ஓர் அவசர அறிவிப்பு. வான் பாயும் அக்கராயன் குளம்

கிளிநொச்சி மக்களுக்கு  ஓர் அவசர அறிவிப்பு  பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி – அக்கராயன் குளம் சற்று முன்னர் வான் பாய ஆரம்பித்துள்ளது.06.12.2018 இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன் இன்று 25 அடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், இக்குளம் முழுமையாக நிரம்பி வான்  பாய ஆரம்பித்துள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 4 டிசம்பர், 2018

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 4661 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும்...

திங்கள், 3 டிசம்பர், 2018

.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மரணம்

யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த தர்மசேகரம் வசீகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை  அசைவற்று கிடந்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய்...