திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை சென்ற 6 வயது சிறுவனை பாழடைந்த வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் சேட்டை புரிந்த இளைஞனை இன்று கைது செய்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் கந்தளாய், பேராறு யுனிட் 1 பகுதியைச் சேர்ந்த 18 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 29ஆம் திகதி பாடசாலைக்குச்சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் போது வீதியால் சென்ற இளைஞன் 6 வயது சிறுவனை முயல் காட்டுவதாக பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று
சிறுவனை பாலியல் சேட்டையில் ஈடுபடுத்தியதாகவும் அவரது உறவினர்கள் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சிறுவனை சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக