சமூக சீர்கேடு:தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை யாழ். வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை பகல் வேளை வீட்டிலிருந்த மனைவியின் நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு
செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டின் உரிமையாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவர், உங்கள் நகைகள் அனைத்தும் வீட்டு வளவினுள் போடப்பட்டுள்ளது என
தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உரிமையாளர் குறித் இடத்திற்கு சென்று பார்த்த போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் அவ்விடத்தில் கிடந்துள்ளன. இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி இலக்கத்திற்கு உரிய இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது அந்த இளைஞன், முறைப்பாட்டாளரின் மகள் தனது காதலி எனவும், அவரே தனது தாயாரின் நகைகளை திருடி தன்னிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து முறைப்பாட்டாளரின் மகளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக