முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்
நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில்
மோட்டார் சைக்கிளில் சென்றசமயம் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம்
நடைபெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் ப
யணம் செய்த இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ்
போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிய குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்றயதினம் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று, இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் (வயது 16) என்ற மாணவனே சாவடைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் போலிசார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக