க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 03.12.2018 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 4661 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
மலையகத்திலும் 03.12.2018 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக