siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 14 டிசம்பர், 2018

மர்ம காய்ச்சலால்யாழில் பாடசாலை மாணவன் மரணம்

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே
 உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
 இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு காச்சல் அதிகரித்து உள்ளது. அதனை அடுத்து மறுநாள் சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி மாணவன் 
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது ,
மாணவன் கடந்த சில நாட்களாகவே காச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை. அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக