யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.
முச்சக்கரவண்டி ஒன்றும் துவிசக்கர வண்டி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக