தொண்டமானாறு பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் போன்று நடித்து வீடு ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க நகைகளை
அபகரித்துச் சென்ற யுவதியொருவர் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி தொண்டமானாறு பகுதியில் இந்தச்
சம்பவம் நடந்தது.
அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் பிடிக்கப்பட்டு இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தொண்டமானாறு அரசடியில்.12-01-2021. அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றுக்குச் சென்ற யுவதி ஒருவர், அங்கிருந்தவர்களை
அழைத்து தன்னை பொதுச்சுகாதார பரிசோதகராக அறிமுகப்படுத்தி, வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வந்துள்ளேன் என்று
கூறியுள்ளார்.அவர் கறுப்பு நிறத்திலான மழை அங்கி அணிந்திருந்துள்ளார். வீட்டின் சுற்றாடலில் தேங்கி நின்ற வெள்ளத்தை தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்த அந்தப் பெண், ஆடை மாற்றுவதற்கு அறையைத் தருமாறு கேட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக