யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் வருகை தந்து தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த
பழைய கட்டிடத்தை அகற்றும் அதே
நேரம் புதிய கட்டிடமும் அமைக்கப்படுகின்றது.இவ்வாறு அமைக்கும் பணிகள் பல நாட்களாக இடம்பெற்று வருகின்றது. பணியில்.24-01-21. அன்று பணி இடம்பெறும்போது மாலை 4மணியளவிலியே குறித்த
அனர்த்தம் இடம்பெற்று பாதிக்கப்பட்டவர்,உடனடியாக
தெல்லிப்பழை
ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிர் இழந்திருந்ததனை மருத்துவர்கள் உறுதி
செய்த நிலையில், தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக