siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 ஜனவரி, 2021

வெல்லாவெளியில் டிப்பர் கண்ணாடியை உடைத்த மரக்கிளை. சாரதி.பலி

 

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மரத்தின் கிளையொன்று குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.
27-01-2021,இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.மண் ஏற்றும் டிப்பர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டிச்சென்று சிறிய
 வீதியொன்றின் ஊடாக செலுத்த முற்பட்டபோது, மரமொன்றின் கிளை வானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு,சாரதியின் நெஞ்சுப்பகுதியை தாக்கியுள்ளது.
இதன்போது வானத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது வாகனத்தில் சென்ற 
உதவியாளர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,களுவாஞ்சிகுடி 
சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.மரண விசாரணையினை 
தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக