siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 18 ஜனவரி, 2021

பால்காரில் காதலியை கொடூரமாக குளியலறையில் கொலை செய்த காதலன்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிட்டார்.
அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறாயே என்று இளம்பெண் கேட்டுள்ளார்.ஆனால், வாலிபரோ திருமணம் செய்துகொள்ளாமல் இப்படியே இருப்போம் என்று கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் உடன்படவில்லை.தொடர்ந்து 
அந்த பெண் வற்புறுத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வாலிபர் காதலியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பெண்ணின் சடலத்தை வீட்டு குளியலறையில் உள்ள சுவற்றில் 
ஆட்டோ சங்கர் பாணியில் வைத்து பூசிவிட்டார்.சில நாட்கள் சென்று விட, பெண்ணிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரித்த போது, வாலிபர் முன்னுக்கு பின் முரணாக 
பதிலளித்துள்ளார்.தொடர்ந்து, வாலிபரின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 
குளியலறைக்குள் புதிதாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த 
போலீசார், அந்த பகுதியை இடித்து பார்த்தபோது, பெண்ணின் எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள்.தொடர்ந்து வாலிபரின் மீது வழக்கை பதிவு செய்த  பொலீசார் கைது செய்தனர்.


நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக