விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு!!திங்கள் பெப்ரவரி 01, 2021
செட்டிகுளம் நகர் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி (01.01.2021)இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 01.01.2021.இன்று உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராஜ்குமார் வயது 54 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக