மது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்டநிலையில் அதனை திரும்ப செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அத்தோடு நுண்கடனை செலுத்த முடியாத பெண்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் பாலியல் இலஞ்சமும் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலே அவர்கள் இவ் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
மேலும் இந்த நுண்கடன் திட்டத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு மலையகத்திலுள்ள பெண்களும் இதே நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக பிரபல திரைப்பட நடிகையான நிரஞ்ஜனி சண்முகராஜா தகவல் வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக