திருகோணமலை - கந்தளாய் தலைமையக காவல் துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர்
உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று (5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த சேனக்க திஸாநாயக்க 43 வயதுடைய வாய்பேச முடியாத ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தளாய் தலைமையக காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக