நாட்டில் 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு பிற்போட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை
அதி கரிக்க முடியுமா என்பதை இந்த மாதத்திற்குள் தீர் மானிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேரா சிரியர் கபில பெரேரா
தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் போது அவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெற்றோர் உட்பட ஏனையோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கபில பெரேரா
தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக