கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் 10-02-2021.அன்று மாலை 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் ஒன்று
நிகழ்ந்துள்ளது.
நடு ஊற்று சுனாமி குடியேற்றத் திட்டத்தில் வசித்து வந்த 2 மீனவர்கள் நேற்று புதன்கிழமை மாலை சுங்கான் குழி குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் 77 வயதுடைய நபர் என
தெரியவருகிறது.
இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததை அடுத்து ஒருவர் நீந்தி கரையை அடைந்து உள்ளார் மற்றவர் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல்
வழங்கியுள்ளார்கள்.காணாமற்போன வரை தேடும் பணியில் பொது மக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக