வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
18-02-2021, இன்று காலை வீதி கடவையில், வீதியை கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த லொறி மோதிச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த குறித்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சசிகலா ஜெயதீஸ்வரன் என்ற ஆசிரியை ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. .
இவ்விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக