siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 மே, 2021

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி அரியரட்னம் குஞ்சன்) 29.05.21

இறப்பு--29.05 2021 யாழ் அச்சுவேலி தெற்கு  பிரப்பத்தாள் குளத்தடியை  வசிப்பிடமாக கொண்ட கந்தசாமி அரியரட்னம்  (ஆசாரி குஞ்சன்) அவர்கள் 29-05-2021.அன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றனஅன்னாரின்...

புதன், 26 மே, 2021

உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த சிறுவன் தீடீர் காய்ச்சலால் மரணம்

  யாழ் நாவலடியைச் சேர்ந்த சிறுவன் தீடீர் காய்ச்சல் காரணமாக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த ப ஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடற் சோர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு யாழ்....

செவ்வாய், 25 மே, 2021

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஜெர்மனியில் 88 ஆயிரத்தைக் கடந்தது

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லடசத்தைக் கடந்துள்ளது.சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது. அவர்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில்...

. கைதடிப் பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து யுவதி மரணம்

சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் 24-05-2021.அன்று.திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி [வயது20 ] என்ற இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நிலாவரை.கொம் செய்திகள் >>>  ...

திங்கள், 24 மே, 2021

!யாழ்.கைதடியில் 6 வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் 21-05-2021.அன்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சமப்வத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>&...

புதன், 19 மே, 2021

காத்தான்குடியில் மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவி

 மட்டக்களப்பில்  மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவியை கைது செய்துள்ள சம்பவம் 18-05-2021.செவ்வாய்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தைச் சோந்த பெண் கடந்து இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் அருந்தும் மதுபானத்தில் நச்சு திரவத்தை கலந்துள்ள நிலையில் அவர் அதனை குடித்த நிலையில் மயக்கம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில்...

செவ்வாய், 18 மே, 2021

புதுக்குடியிருப்பில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கமைய பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என...

திங்கள், 17 மே, 2021

தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.மொனராகலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று கூறியுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>> &...

ஞாயிறு, 16 மே, 2021

தெஹிவலயில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர்  சிறிலங்கா காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவல பகுதியில் வைத்து 15-05-2021.அன்று மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிக்றது.குறித்த ட்ரோனை காவல் துறையினர்  கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நிலாவரை.கொம் செய்திகள் >>&...

நாட்டில் சீரற்ற காலநிலையால் மூவர் பலி, 11,542 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.அத்துடன் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழையடனான காலநிலையால் 205 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சனி, 15 மே, 2021

கோண்டாவிலில் மின் தாக்குதலிற்கு உள்ளான குடும்பப்பெண் ஒருவர்உயிரிழப்பு

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி 15-05-2021.இன்று உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி (வயது-37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப்பந்தலின் கால் ஒன்றில் குடும்பப்பெண் பிடித்துள்ளார். அதில் மின்குமிழுக்கு...

வியாழன், 13 மே, 2021

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி

   மேலும்  எவ்வித ஒவ்வாமையையும் கொண்டிராத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசி எடுத்துவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>  ...

மாவடிவேம்பு பிரதான வீதியில் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

ஏறாவூர்-செங்கலடி,மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில்,வேன் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று (புதன்கிழமை) இரவு,ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்ற வாகனம்,வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் விபத்துக்கு, சாரதியின் அதிவேகமும் தூக்க கலக்கமுமே காரணமென காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த சம்பவத்தில் வான்...

இந்தியாவில் எட்டு இலங்கையர் கொரோனா தொற்ரால் மரணம்

  கொரோனா தொற்றுக் காரணமாக எட்டு இலங்கையர் இந்தியாவில் மரணமடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.இதில் ஆறு பேர் புதுடில்லியிலும்,இருவர் ராஜஸ்தானிலும் மரணமடைந்தனர்.இதே வேளையில்,புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஆறு பேருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.தூதரகப் பணியாளர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், தூதரகமும் மூடப்பட்டிருக்கின்றது.இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு சிக்கியுள்ள...

மரண அறிவித்தல் திருமதி புவனராணி குலசிங்கம் (ராணி)13.05.21

பிறப்பு-08 AUG 1945--இறப்பு-13 MAY 2021யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி (ராணி) குலசிங்கம் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  சாவகச்சேரி வடக்கு, சங்கத்தானை, ஆசிரியர் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கீரியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை...

புதன், 12 மே, 2021

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று வயோதிபர்களுக்கு அதிகளவு ஆபத்த

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 12-05-2021.இன்று  இந்தகத் கருருத்தை வெளியிட்டார்.இளையவர்களை விடவும் வயது முதிர்ந்தவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையில் கோவிட் காரணமாக இளையோருக்கு ஆபத்து அதிகம் என பேசப்பட்ட போதிலும், உயிரிழப்பு குறித்த புள்ளி...

செவ்வாய், 11 மே, 2021

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு கிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்கள்

நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில்  இடம்பெற்ற கோவிட் தடுப்பு விசேட கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பிரதம மந்திரி அலுலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு...

ஞாயிறு, 9 மே, 2021

மரண அறிவித்தல், திரு பேரின்பநாயகம் சுப்பையா 09 05 2021

பிறப்பு-16 FEB 1939-இறப்பு-09 MAY 2021-யாழ். கருணையம்பதியைப்   பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பையா பேரின்பநாயகம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கௌரி, உத்தமசீலன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,குகநேசன்,...

வியாழன், 6 மே, 2021

சிறாம்பியடியில் மரண வீட்டுக்குச் சென்றதாக 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத் தவறால் யாழில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படும் அவலம் ஏற்பட்டுள்ளது என சிறாம்பியடி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-யாழ். சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளை 05-05-2021.அன்று உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் வீட்டாரிடம் வழங்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வழங்கப்பட்ட சடலம் என்பதால் நம்பிக்கையின் அடிப்படையில்...

புதன், 5 மே, 2021

பாரதிபுர கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

  கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் 04-05-2021.அன்று இடம்பெற்றுள்ளது.பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து வீடு திரும்பிய பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் அதிகாலை தாயார் சென்று பார்வையிட்ட போதே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் ஒரு வருடத்திற்கு...

சனி, 1 மே, 2021

எதிர்வரும்வெள்ளிக்கிழமை முதல் யாழ். கொழும்பு இரவு நேர தபால் புகையிரத படுக்கை ஆசன வசதி

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 07-05.2021. ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி (Sleeper Train Compartment ) இணைத்துக் கொள்ளப் படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

நாட்டில் மரணச் சடங்கு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒருவர் மரணித்தால 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் 19 அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டுமென சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது  மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே ;கலந்துகொள்ள முடியுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நிலாவரை.கொம் செய்திகள் >>>...

நாட்டில் மறு அறிவித்தல் வரை இவைகள் மூடப்பட்டிருக்கும்

நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் ஆகியன மறு  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, அறிவித்தல் வரைமூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  நிலாவரை.கொம் செய்திகள் >>>...