siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 ஜூலை, 2022

திடீரென வானிலையில் மாற்றம் சீனாவில் வெள்ளப்பெருக்கு12 பேர் உயிரிழப்பு

சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், 16-07-2022.நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. 
இதன்காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு
 மழை பெய்துள்ளது. 
இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 
இந்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக 
வெளியேற்றப்பட்டனர். 
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமான காற்று அதிக நீரைச் சேமித்து வைக்கும். 
அது வெளியிடப்படும் போது பெரிய மேக வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி உள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக