siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 23 ஜூலை, 2022

கொளுத்தும் உச்சகட்ட வெயில் ஸ்பெயினில் 1,047 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 
40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை 
தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக 
உயர்ந்துள்ளது. 
உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக