எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து பயணிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட
வேண்டும், அதற்கான பரிந்துரைகள் வரும் வரையில் காத்திருப்பதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருவதுடன், புதிய பேருந்து கட்டணம் இன்று முற்பகல் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக