அனைவருக்குமே வயதாகும்! எல்லோருக்குமே முதிய பருவத்தை எட்டுவர். இளம் மற்றும் நடுத்தர வயதில் இருப்பதுபோல முதிய பருவம் மகிழ்ச்சி, வருத்தம், சோகம் என்று மாறி மாறி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பலருக்கும் முதுமை என்றால் கொஞ்சம் பயமாகத்தான்
இருக்கும். வயதாகும் போது வாழ்க்கை உங்களுக்கு கொஞ்சம் சுலபமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நீங்கள் அத்தனை வருடங்கள்
கடந்து வந்த அனுபவங்களைத்தான் மறுபடியும் எதிர்கொள்வீர்கள். அதேபோல முதுமை காலத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பலரும் அறிந்திராத சில குறிப்பிட்ட விஷயங்கள் இங்கே.
முதுமை என்பது நோய் மட்டும் கிடையாது:
முதுமை காலத்தை பற்றி பலரும் தவறாக நினைப்பதில் முக்கியமான விஷயம், வயதாகும் பொழுது நோய்களும் அதிகரித்துவிடும். எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டும்,
மருத்துவமனை, மருந்து மாத்திரைகள் என்று முதுமைக்காலம் முழுவதும் உடல் நல பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். முதுமை
காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது உண்மைதான். அது மட்டுமின்றி வயதாகும் பொழுது ஒரு சில குறைப்பாடுகள் மற்றும் நோய்களும் ஏற்படும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை
முறையின் மூலமாக எளிமையாகத் தடுக்கலாம். இப்போது இருக்கும் இளைஞர்களை விட முதியவர்களை ஆரோக்கியத்துடன் இருப்பதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
முதுமைக்காலம் என்றால் ஓய்வு மட்டும் கிடையாது:
இளமை காலம் முதல் நடுத்தர வயது முழுவதும் பல ஆண்டுகளாக பரபரப்பாக ஓடி உழைத்திருப்பீர்கள். அதனாலேயே, ஓய்வு எடுக்க வேண்டும் வழக்கமான விஷயங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. இது ஒரு வகையில் நியாயம்தான். ஆனால் உங்களுக்கு
வயதாகிவிட்டது நீங்கள் ஓய்வெடுங்கள் என்று நாள்
முழுவதும் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டுமென்று அவசியமே
இல்லை. வயதாவது என்பதாலேயே ஒருவரை
உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக சோர்வாகிடக் கூடாது. எனவே வயதாகி
விட்டது அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற காரணத்தால் அமைதியாகிவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
கூடுதல் நேரத்தால் புதியதாக கற்றுக் கொள்ளலாம்:
முதுமையில் வழக்கமான பொறுப்புகள் குறையும் பொழுது, உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். கூடுதல் நேரம் கிடைப்பதால் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம். கற்றுக்கொள்வதற்கு வயது தடையே கிடையாது, எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக
உங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லை, வேலை, குடும்பம் என்று நீங்கள் சுழன்று கொண்டே இருந்து முதுமை காலத்தில் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போதும் நிச்சயமாக கூடுதலாக நேரம்
இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் புதிதாக ஒன்றை
கற்றுக் கொள்ளலாம். இது உங்களுடைய வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும்.
நீங்களும் ஒரு வயதுவரை செய்ய முடியாதா என்று வருத்தப்பட்ட விஷயங்களை இப்பொழுது செய்யலாம். பயணங்கள் செல்லலாம், தோட்டம் வளர்க்கலாம், சமையல் கற்றுக்கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் பயம் மற்றும் கவலையை அகற்ற வேண்டும்:
வயதாகிவிட்டது என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை முதலில் வெளியேற்ற வேண்டும். அனைவருக்குமே முதுமை ஏற்படும். ஆனால், வயதாகும் போது நீங்கள் பயப்பட வேண்டிய
அவசியமே இல்லை.
உடலில் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு காலட்டத்திலும் ஏற்படும். ஒரு சில வருடங்களில் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் மற்றும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். நீங்கள் நோய்களைப் பற்றிய கவலை பட வேண்டாம், அதே போல உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்தும் கவலைப்படத்
தேவையில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக