தங்களது வீட்டில் சிலர் இறந்தவர்களின் படங்களை தெய்வத்தின் படங்களோடு சேர்த்து வைத்து வணங்குகின்றனர்.இப்படிச் செய்தல் முறையா? இறந்தவர்களின் படங்களை எங்கு வைத்து வழிபடுவது நல்லது போன்ற தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாக தெய்வப் படத்திற்கு நிகராக எந்தப் படத்தையும் வைக்கக்கூடாது. தெய்வம் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் மக்களை காக்கும் சக்தி. இறந்தவர்கள் அப்படி கிடையாது அவர்கள் அனைவரும்
மனிதப் பிறவிகளே.
ஓரிரு தலைமுறைகளுக்கு பின் அவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போய்விடும். அப்படி இருக்கையில் இறந்தவர்களின் படங்களை தெய்வத்தின் படங்களோடு
வைப்பது பெரும் தவறு.
அது போல் இறந்தவர்களின் படங்களை கடவுள் படங்களின் தலைக்கு மேல் பகுதியில் வைத்து வணங்கக்கூடாது. கடவுளே தலை சிறந்தவர் அவருக்கு கீழ் தான் அனைவரும்.
எப்பொழுதும் இறந்தவர்களின் படங்களை கடவுளின் மற்ற படங்களோடு சேர்க்காமல் தனியாக தரை மட்டத்தில் வைத்து வணங்குவது சிறந்தது.
இப்படி செய்வதால் கடவுளின் அனுக்கிரகமும் கிடைக்கும் இறந்தவர்களின் ஆசியும் கிடைக்கும் என்று கூறுகிறது ஜோதிடம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக