பாகிஸ்தானில் குழந்தைகள் முன் மனைவியை கொன்று, கொடூர கணவன் ஒருவர் பானையில் கொதிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற இடத்தில் தனியார் பாடசாலை ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வாட்ச்மேனாக ஆஷிக் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவரது மனைவி நர்கீஸ். ஆஷிக் அவரது மனைவியை தனது 6 குழந்தைகளின் முன் கொன்று, உலோக பானை ஒன்றில் போட்டு கொதிக்க வைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் சாட்சியாக உள்ளவர்களில் ஒருவரான, அவரது 15 வயது மகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடம் ஆஷிக்கின்
மகள் கூறுகையில்,
நர்கீசை அவரது கணவர் ஆஷிக் முதலில், தலையணை ஒன்றை வைத்து மூச்சு திணற செய்து உயிரிழக்க செய்துள்ளார்.
இதன்பின்னர், பாடசாலை கூடத்தில் இருந்த உலோக பானை ஒன்றில் உடலை போட்டு கொதிக்க வைத்துள்ளார்.
இவை அனைத்தும் அவர்களின் குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. இதனையடுத்து அவரது தந்தை தாயை கொன்று கொதிக்கவைத்ததுடன் 3 குழந்தைகளை உடன் அழைத்து கொண்டு தப்பியோடி விட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
பாடசாலையில் இருந்த பணியாளர்கள் குடியிருப்பிலேயே ஆஷிக் வசித்து வந்துள்ளார். கடந்த 8 முதல் 9 மாதங்களாக பாடசாலை செயல்படாமல் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், பெண்ணின் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றி பொலிசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
அதேசமயம் நர்கீசை சட்டவிரோத உறவில் ஈடுபட ஆஷிக் வலியுறுத்தி உள்ளார். அதற்கு நர்சீஸ் மறுத்த நிலையில், அவரை ஆஷிக் கொலை செய்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், மீதமுள்ள 3 குழந்தைகளையும் மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
கண்முன் நடந்தேறிய இந்த ஆஷிக்கின் குழந்தைகள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும், நர்கீசின் உடல் மீட்கப்பட்டு ஜின்னா முதுநிலை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ள நிலையில் பொலிஸார் குற்றவாளியை தேடி வருவதாகவும்
கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக