எரிபொருள் நெருக்கடி காரணமாக சிறிய ரக லொறியொன்றில் பயணித்த பாடசாலை மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.பாடசாலை மாணவர்கள் பயணித்த லொறியின் தரைப் பலகை உடைந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்வபம் 30-06-2022.அன்றயதினம் அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வழமையான பேருந்துகள் பயணிக்காததால் மாணவர்கள் லொறியில் பாடசாலைக்கு செல்ல நேர்ந்ததையடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறிய லொறியின் பின்னால் 30 மாணவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
காயமடைந்த மாணவர்கள் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக