யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக