siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜூலை, 2022

நாட்டில் அரை நாள் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

இலங்கையில் வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக