நாட்டில் கடுவலையில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயது, 6 வயதுடைய இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே
உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்தினர் அதன் மேல் மாடியில் வசித்து
வந்துள்ளனர்.
இந்நிலையில் கீழ் தளத்தில் இருந்த மின்சாதன உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக மேல் மாடியில் வசித்து வந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக