siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 ஆகஸ்ட், 2024

மரண அறிவித்தல் அமரர் இளையதம்பி கனகசபை 06.08.2024

தோற்றம் 00-மறைவு-06-08-2024.
யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரைய்  வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
அமரர் இளையதம்பி கனகசபை (நீர் இறைக்கும் இயந்திரங்கள் பழுது பார்ப்பதில் பிரபலியமான)  அவர்கள் 06-08-2024.செவாய்க்கிழமை அன்று  
இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ் சென்றவர்களான இளையதம்பி -ஆச்சிமுத்து   தம்பதிகளின் அன்பு மகனும் 
காலஞ் சென்ற புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும் கலக்குமார் .கலையரசி .கலைமகள் .ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  06-08-2024. செவாய்க்கிழமை 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
06-08-2024.செவாய்க்கிழமை அன்று ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு--
மகன் -இலங்கை - 0094755437287.
மகள் -இலங்கை-0094765394630
மகள் -சுவிஸ்- 0041762482376


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்

நாட்டில்  வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றின் கிணற்றினுள் இன்று காலை சடலம் ஒன்று அடையாளம்
 காணப்பட்டுள்ளது.
 வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை சேர்ந்த வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை 
நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பதுடன் அண்மைக்காலமாக தவறான முடிவெடுத்து உயிரை
 மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன
 என்பது குறிப்பிடத்தக்கதாகும்




ஒன்றாரியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

கனடா ஒன்றாரியோவின் ஸ்டார்ட்போர்ட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 36 வயதான ஜொனதன் பெனாட் என்பவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புதிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை 31 வயதான ரிக்கி பில்கே என்பவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் மேலும் இரண்டு பேர் காயமடைந்திருந்தனர் 
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரும் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
 இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

மரண அறிவித்தல் திருமதி கந்தையா ஜெகதீஸ்வரி 04.08.2024

துயர் பகிர்வு மலர்வு .18-03-1963-- உதிர்வு -04-08-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட.
 திருமதி  கந்தையா ஜெகதீஸ்வரி
அவர்கள்  04.08.2024..அன்று இறைபாதம் அடைந்தார்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

நாட்டில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து பலர் படுகாயம்

நாட்டில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் 
அனுமதிக்கப் .பட்டுள்ளனர் 
மஹாஓயா - அரலகங்வில வீதியின் MDK ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்  03-08-2024.அன்று  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 மஹா ஓயாவில் இருந்து அரலகங்வில நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இரண்டு பேரூந்துகளிலும் பயணித்த 02 ஆண்கள், 12 பெண்கள், 06 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் காயமடைந்து மஹா ஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 


சனி, 3 ஆகஸ்ட், 2024

யாழ் சுன்னாகம் பகுதியில் ஹைஏஸ் வான் மோதியதில் பெண்ணொருவர் பலி

யாழ் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். சங்கானை பகுதியைச் சேர்ந்த 51 வயதான
 பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் 
சைக்கிள் மீது 
பின்னால் வந்த ஹைஏஸ் வான் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து 
பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.





 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

நாட்டில் மூதூர் பெண் வினோதினி கொலை வழக்கு: ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சேருவில – தங்க நகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (02) விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இதன்போது குறித்த ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் செய்திருந்தனர். குறித்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி, அந்த எதிரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை எனவும் பிணை விண்ணப்பம் ஆனது மேல் நீதிமன்றத்தினால் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்து பிணை விண்ணப்பத்தை நிராகரித்து குறித்த சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

 சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்க நகரைச் சேர்ந்த நரேஷ் குமார் வினோதினி என்ற 25 வயதான இளம் பெண்ணின் சடலம் கிளிவெட்டி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் குறித்த யுவதியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்த யுவதியின் காதலன், அவரது தந்தை, சகோதரி, சிறிய தந்தை, வீட்டு வேலைக்காரன் மற்றும் ஜே.சி.பி வாகனத்துடன் தொடர்புடைய இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த வழக்கானது கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸார், கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நான்கு பேரை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சமர்ப்பணம் செய்திருந்தனர். 

இதில் திருப்தி கொள்ளாத நீதிமன்றம் குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தது குறித்த ஏழு நபர்களுக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது  என்பதாகும்


வியாழன், 1 ஆகஸ்ட், 2024

நாட்டில் சுமார் ஐம்பது க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில்  (30.07.2024) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
 இந்த நடவடிக்கையில் 44 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசாரணை அதிகாரிகளால் குறித்த ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் 
ஈடுபட்டுள்ளனர்.
 இந்த நடவடிக்கையின் போது, ​​98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகள் என்பன
 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு
 வருகின்றனர்.
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது 10 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது  






 

புதன், 31 ஜூலை, 2024

நாட்டில் லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 ஜூலை, 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 
மேல் மாகாணத்தின், கொழும்பு மாவட்டத்தில் 7, 613 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,453 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,781 பேரும் பதிவாகியுள்ளனர்.
 இந்த மாதத்தில் மாத்திரம் 40,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
 இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32,301 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 ஜூலை, 2024

பிரித்தானியா நோக்கி பிரான்ஸில் இருந்து பயணித்த படகு விபத்துக்குள்ளானது

இங்கிலாந்திற்கு  பிரான்சில் இருந்து புறப்பட்ட சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 34 பேர் மீட்கப்பட்டு அவசர சேவைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, கடலில் இன்னும் பல படகுகள் உள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
UK புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,500 பேர் உலகின் பரபரப்பான கப்பல் பாதையை 27 படகுகளில் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மரண அறிவித்தல் ஆசிரிர் திரு சரவணமுத்து கருணாகரன்

துயர் பகிர்வு- தோற்றம்-10-08-1977 -மறைவு-24-07-2024
யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு சரவணமுத்து கருணாகரன்
அவர்கள்.24.07.2024.அன்று  மாலை அச்சுவேலியில் காலமானார். 
அன்னார் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியரும் பிரபல கல்வி நிறுவனங்களின் உயர்தர வகுப்பு தமிழ் ஆசிரியரும் ஆவார் 
 அன்னாரின் இறுதிச் சடங்கு (பெரும்பாலும்) எதிர்வரும்  
ஞாயிற்றுக்கிழமை 28.07.2024 காலை  அச்சு வேலி வடக்கு அச்சுவேலி என்னும் முகவரியில் உள்ள (உலவிக்குளம் பிள்ளையார் அருகில்) அவரது இல்லத்தில் இடம்பெற்று பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!



சனி, 27 ஜூலை, 2024

பாடசாலை காசாவில் மீது தாக்குதல் முப்பது பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. 

இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. 

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்என்பது குறிப்பிடத்தக்கது துள்ளது 


வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ரயிலில் மோதி இருபத்தி ஆறு வயது இளைஞன் மரணம்

நாட்டில்  தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் 
தெரிவித்தனர்.

றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது






வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்

நாட்டில் மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு
 நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  
பொலிரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து 
ஏற்பட்டுள்ளது. 
விபத்தின் பின்னர், கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற பெரும் முயற்சிகளை 
மேற்கொண்டுள்ளனர்.  
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி தொம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் துணுக்காய் பிரதேசத்தில் நெல்லு காவலுக்கு இருந்தவர் மீது துப்பாக்கிசூடு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
 இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார் இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத
 நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார
 அமைப்பின்
 செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் 
படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
 கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு
 நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 23 ஜூலை, 2024

கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டிக்குள் நடந்த கொலை

கொழும்பில் (23.07.2024) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை 
பொலிஸார் கண்டு 
பிடித்தனர். 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த
 தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 22 ஜூலை, 2024

மரண அறிவித்தல் அமரர் ராசரத்தினம் பாலசிங்கம்

துயர் பகிர்வு-மறைவு-22-07-2024.
.யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை
 வதிவிடமாகக் கொண்ட   
 அமரர்  ராசரத்தினம்  பாலசிங்கம் அவர்கள்  22-07-2024.திங்கள்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற  ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத்  தந்தையும் ஆவர்  அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் 
இந்த இணையத்தில் இணைக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


ஞாயிறு, 21 ஜூலை, 2024

எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்

இலங்கையில் கடந்த ஆண்டு, எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
 வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க 
தெரிவித்தார்.
 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் குறிப்பிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

இகிரியகொல்லேவ பகுதியில் எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2024) தினம்தெரிவித்தார்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் 
ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து
 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் 
இன்று (20.07.2024) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2924) தினம்தெரிவித்தார்.
 என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>