பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே இந்த விடயத்தினைத்
தெரிவித்துள்ளார்.
தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இணையம் ஊடாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும்
அவர் கூறியுள்ளார்.
காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனூடாக காணிப்பதிவுகளை அவசரமாக செய்து கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக