யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா வை (Sydney )
வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் லோகேஸ்வரன் பிரசித்தி பெற்ற,சடடத்தரணி- நொத்தாரியார் ,அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சதாசிவம்(ஜே. பி) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வனும், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி (ஆசிரியை )அவர்களின் அன்புக் கணவரும், பிரவாகினி(சிட்னி), எண்குணன்(சிட்னி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், காலஞ்சென்றவர்களான நல்லநாயகி, ரங்கநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிருஷ்ணகுமாரன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்றவர்களான தா. வேல்நம்பி, க. கனகரத்தினம்(மந்துவில்) மற்றும் டாக்டர் மனோன்மணி(லண்டன்), சுதந்திரநாதன் நிரஞ்சலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற காந்திமதிநாதன், கமலாதேவி(கொழும்பு), ஜீவாஅமிர்தம் புனிதவதி(நல்லூர்) ஆகியோரின் மைத்துனரும், சரக்ஷா, பபிதன், யஷ்னி, சேஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னார் புத்தூர்ஶ்ரீ குமர குருபரன் கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் , 1978 ம்ஆண்டுநடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி நடாத்திய 2வது தேசிய மகாநாட்டின் பொருளாளராகவும் , தமிழரசுக் கட்சியில் முக்கிய பதவிகளிலும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தேரம்பிள்ளையாரை வேண்டி நிற்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக