நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் இன்று (6) ஆரம்பிக்கிறது.நான்கு கட்டங்களாக பாடசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் கல்வியமைச்சின் திட்டத்திற்கு இணங்க, இரண்டாம் கட்டமாக இன்று தரம் 5, 11, 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கிறது.
முதற்கட்டமாக ஜூலை 29ஆம் திகதி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். பாடசாலைகளை கிருமி நீக்கியதுடன், பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இன்று முதல் கல்வி
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், கற்பித்தலிற்கே முன்னுரிமையளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தரம் 5 முதல் 11 வரையான மாணவர்களின் கல்வி செயற்பாடு காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து, மதியம் 1.30 மணிவரை இடம்பெறும். தரம் 13 மாணவர்களின் கல்வி செயற்பாடு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை
இடம்பெறும்.
அனைத்து ஆசிரியர்களும் காலை 7.30 மணிக்கே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை. அவர்கள் கற்பிக்கும் பாடநெறி ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது.
அதேபோல, அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரையும் கடமையிலிருக்க வேண்டியதில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக