வவுனியா, பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பையில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை கணடறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொதுமகன் ஒருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு
மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா, பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனை பாவனைக்கு உட்படுத்தியபோது அதனுள் ஓர் விதமான இராசயான பொருள் கலந்திருந்தமையை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அதுகுறித்து பாவனையாளர் வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில், வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
அதேவேளை சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்ய பயன்படுத்தப்படு்ம் சிற்றிக்கசிட் தவறுதலாக சீனியில் கலந்துள்ளதாக தெரிவித்த குறித்த வர்த்தக நிலையம், குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக அதனை மீள வழங்குமாறும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக