siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

இந்த மாதிரி உங்க வீட்ல் பல்லியை பார்த்தால் பிரச்சனை வீடு தேடி வருமாம்

நம் அனைவரது வீட்டின் சுவரிலும் இருக்கும் ஓர் விலங்கு தான் பல்லி. இந்த பல்லி பார்ப்பதற்கு பலருக்கு அருவருப்பான உணர்வைத் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் பல்லி லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது என்பது தெரியுமா? மேலும் நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போது பல்லி சப்தமிட்டால் அது நல்ல ஒரு 
சகுனமாக கருதப்படுகிறது.
இது தவிர கோவில் மற்றும் வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால், அது மிகவும் நல்ல அறிகுறியாகவும் நம்பப்படுகிறது.அதுமட்டுமின்றி, வீட்டில் பல்லி இருந்தால், எப்போதும் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தைப் 
பராமரிக்கிறது.
அதோடு வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட பல்லியை எங்கு கண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும், எங்கு கண்டால் பிரச்சனை வரும் என்பதைப் பற்றி
 இப்போது காண்போம்.
எந்நாளில் பல்லியைக் காண்பது நல்லது?சாஸ்திரத்தின் படி, பல்லியை குறிப்பிட்ட நாளில் காண்பது மங்களகரமானதாக கூறப்படுகிறது. அதுவும் தீபாவளி பண்டிகை அன்று இரவில் வீட்டில் பல்லியைப் பார்த்தால், அது மிகவும் நல்ல அறிகுறி. ஏனெனில் பல்லி லட்சுமி தேவியைக் குறிக்கிறது. எனவே தீபாவளி அன்று வீட்டில் புதிதாக பல்லியைக் கண்டால், அது வீட்டிற்கு லட்சுமி தேவி வருவதைச் சுட்டிக் காட்டுகிறது என்று 
நம்பப்படுகிறது. 
புதிய வீட்டில் பல்லிபுதிய வீட்டில் அல்லது வீட்டிற்குள் நுழையும் போது பல்லியைக் கண்டால், அது முன்னோர் அல்லது தாய், தந்தையின் வருகையைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இது தங்களை ஆசீர்வதிக்க முன்னோர் அல்லது தாய், தந்தை பல்லியாக தோன்றி வந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் போது, பல்லி இறந்து அல்லது மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டால், அது ஒரு கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
கனவில் பல்லிஒருவரது கனவில் பல்லியுடன் சண்டையிடுவதைக் காண்பது வேறுபாடுகளைக் காட்டுகிறது. மறுபுறம், கனவில் பல்லியைப் பிடிக்க முயன்று, அவை பயந்து ஓடுவது போன்று தோன்றினால், அது நல்ல அறிகுறி. இதன் பொருள் நீங்கள் விரைவில் நல்ல செய்தியைப் பெறப்போகிறீர்கள் மற்றும் பண மழையில் நனையப் போகிறீர்கள் என்று அர்த்தம். 
பல்லி சண்டைவீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லிகள் சண்டையிடுவதைக் கண்டால், அது ஒரு வீட்டுப் பிரச்சனையைக் குறிக்கிறது. பல்லிகளுக்கு இடையே ஏற்படும் சண்டை, வீட்டில் உள்ளவர்களிடையே ஒற்றுமையின்மையைக் காட்டுவதோடு, காரணமின்றி வீட்டில் சண்டைகள் தொடங்க போவதையும் குறிக்கிறது. எனவே உஷாராகிக்
 கொள்ளுங்கள்.
வீட்டின் தரையில் பல்லி நடப்பதுஉங்கள் வீட்டின் தரையில் மீண்டும் மீண்டும் பல்லி நடமாடுகிறதா? அப்படியானால் அது பூகம்பம் அல்லது புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளைக் குறிக்கிறது. இது தவிர, வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படப் போவதையும் இது குறிக்கிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணயச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக