நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு இடம்பெற்ற 22 ஆயிரம் வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்தனர். அத்துடன் குறித்த விபத்துகளில் 14 ஆயிரம் பேர் காயமடைந்தனர். நாளாந்தம் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக