இலங்கையில் கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
எனவே பாதுகாப்பற்ற சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே இந்த துயரமான போக்குக்கு இட்டுச் சென்றுள்ளது என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுபோன்ற பயணங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினால் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்புக்கூறவேண்டும்.
மதுபோதையில் ஆற்றில் குளிக்கச்சென்ற மற்றும் நீராடச் சென்ற சில சிரேஸ்ட மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதுபோன்ற 18 சம்பவங்கள் பதிவாகின.
இந்தநிலையில் பாதுகாப்பற்ற பயணங்களுக்கு மாணவர்களை ஒழுங்கமைத்து அவர்களுடன் சென்றதற்காக சுமார் ஆறு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அதிபர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவேண்டும்
என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு நீரில் மூழ்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 16 பேர் மாணவர்களாவர் என்றும் குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக