நொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. 31-01-2022.அன்று காலை சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என அடுப்பில் வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து வீட்டில் இருந்த அனைவரும் அச்சத்தில் வெளியேறியுள்ளனர்.
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டினுள் சென்று எரிவாயு அடுப்பின் ரெகுலேட்டரை அகற்றியுள்ளனர்.
இதனையடுத்து எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்தாக பொலிசாருக்கு வீட்டினர் தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக