பிறப்பு-08-03-1940--இறப்பு-24-02 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி இரசரட்ணம் செல்லம்மா
. அன்னார்,காலம்சென்ற இரசரட்ணம் அவர்களின்,அன்புமனைவியும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம் (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல்
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக