கந்தளாய், அக்போபுர பேரமடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில்
உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வைத்தே இந்த சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுமியின் காதலர் என கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் தாயும் வீட்டில் இருந்தார் எனவும், சந்தேக நபர் வீட்டில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 9ம் திகதி வரையில் குறித்த இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக