உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் தங்கத்தில் விலை என்பன எகிறியுள்ளது. அதன்படி கச்சா எண்னெய் பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளதுடன் தங்கத்தின் விலையும்
அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையின் ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31ஆம் திகதி 91.03 டொலருக்கு வர்த்தகமானது. இந்த நிலையில் தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பரல் 98 டொலரில் இருந்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளது.
அதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலரைத் தொட்டுள்ளதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் என்றே கூறப்படுகிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் சந்தையில் சுணக்கம் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை, இதனை வாய்ப்பாக சரியாகப் பயன்படுத்திக்
கொண்டுள்ளது .
இது ஒரு பரலுக்கு 115 டொலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தமுறை இந்த விலையேற்றம் இந்திய எரிபொருள் சந்தையில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதேவேளை, பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டதுடன் தங்கத்தின் விலை 1.2 வீதத்தால் அதிகரித்தது. மேலும் மின்னிலக்க நாணயச் சந்தையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதுதுடன் Bitcoin விலை 36,000 அமெரிக்க டொலருக்குக் கீழ், ஒரு மாதம் காணாத அளவு சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக