கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று காலை குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் புகுந்த மோட்டார் சைக்களில் வந்த இருவர், வீட்டிலிருந்த மூன்று நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையினால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் வீட்டிலிருந்த மூவரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மூவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபபட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த மற்றைய நபர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியில் வசிக்கும் 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் கம்பஹா நீதிவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக