siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 நவம்பர், 2020

விபத்தில் மன்னாரில் படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தர் மரணம்

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13-11-20. ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி 
விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த
 தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் இன்றி  24-11-20.,அன்று உயிரிழந்தார்.
மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் தள்ளாடி 
சந்தியில் கடந்த 13-11-20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி வந்த குறித்த 
நபர் படுகாயம் அடைந்தார்.குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி
 சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த 
நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 
யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
 பெற்று வந்த நிலையில் குறித்த நபர் 24-11-20.அன்று  சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை 
வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ளது 48 மணி நேரத்தில் கரை கடக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ள நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வடக்கு கரையோரமாக தமிழக கரையோரத்தை நோக்கி 
நகரவுள்ளது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2020

எரவல தர்மபால வித்தியாலய மைதானத்தில் மாணவன் மீது துப்பாக்கி சூடு

கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது 22-11-20.அன்று  மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாணவன் காயமடைந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போதே இவ்வாறு வாயு துப்பாக்கி ஒன்றால் துப்பாக்கி பிரயோகம் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 22 நவம்பர், 2020

யாழில் பொலிஸ் அதிகாரியால் அழகான முறையில் தயாராகும் கீரைப்பிட்டு

 

நாட்டில் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என சில
 தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை 
சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை 
வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணத்தவர்களின் உணவு 
குறித்து தெரிவித்த கருத்துக்களுக்குகடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ள நிலையில், யாழில் வயோதிப மாது 
ஒருவர் மிகவும் தத்துரூபமான முறையில் யாழ்ப்பாணக் கீரைப்பிட்டு செய்கின்றார் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மட்டுவில் பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ் தென்மராட்சியில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் 21-11-20.அன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு
 மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவ வேளை
 பெண்ணின் இரு தம்பிமாரும் (சிறியவர்கள்) விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். தாத்தாவும் வீட்டில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவத்தில் தர்மகுலராசா மாருதி வயது 22 என்பவரே உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி 
நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி. தவமலர் விசாரணைகளை
 மேற்கொண்ட பின் யாழ்.போதனா 
வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணரின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
 கையளிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

தேத்தாதீவில் சிற்றுண்டி வாங்கச் சென்ற சிறுமியை பந்தாடியது லொறி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது, 
சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று
 மோதியுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு
 கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக 
சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இந்நிலையில், 20-11-20.அன்று 
 இரவு சிறுமி உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வடக்கு மாகாணஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் 
தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு
 23-11-20.அன்று  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் (மேல் நிலை பாடசாலைகளுடன் இயங்கும் ஆரம்ப பிரிவுகள் உட்பட) பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் 
தெரிவித்துள்ளார்.
எனினும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 21 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு .சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 22 .11. 20

யாழ் ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும் 
வதிவிடமாகவும் கொண்ட. 
திரு. சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 
                          அவர்கள் 22-11-20. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

கரவெட்டியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர்.17-11-20. இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து
 கல்வி கற்றுவந்திருக்கின்றார்.
அந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>



திங்கள், 16 நவம்பர், 2020

சாதனை மாணவன் வடக்கிற்கு சேவையாற்றுவதே எனது நோக்கம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்று ச.ஆர்வலன் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.
பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 14 நவம்பர், 2020

அனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய 
உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
 கொண்டாடி மகிழ்வார் 
 ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். 
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 13 நவம்பர், 2020

யாழில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுமி.மரணம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி 
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 3-ஆம் திகதி குறித்த சிறு மி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த 
ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க 
முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்தபோது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தூங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு பதறி அவரை உடனடியாக
 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி 12-11-20.அன்று உயிரிழந்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 12 நவம்பர், 2020

கிளிநொச்சி தொண்டமான் நகரில் சுவர் இடிந்து சிறுவன் மரணம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொண்டமான் நகர் பகுதியில் தற்காலிக வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரோஜன் ரிஷாந்தன் (எட்டு வயது) என்ற சிறுவனே இடிந்து வீழ்ந்த சுவரில் சிக்குண்டு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 11 நவம்பர், 2020

நாட்டில் மிகப் பெரிய கப்பலை டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.113.1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21.5 மீற்றர்களும், ஆழம் 8.8 மீற்றர்களும் ஆகும். மணிக்கு 14.5மைல் வேகத்தில் இந்தக் கப்பலால்
 பயணிக்க முடியும்.
முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


அம்பாந்தோட்டை யில் சிறையில் கைதி திடீர் மரணம்

துஷ்பிரயோக வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அம்பாந்தோட்டை – அங்குனகொபெலஸ்ஸ சிறையில்.11-11-20. இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார்.
சிறுவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய கைதியே இவ்வாறு 
மரணித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 10 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு தாமோதரம்பிள்ளை நாதன் 09 .11. 20

பிறப்பு-   18 OCT 1953 -   இறப்பு-09 NOV 2020    
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frick ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாதன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிசில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மாசிலாமணி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும், அபீரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஷானி, சாகித்தியா ஆகியோரின் 
பாசமிகு மாமனாரும்,
 வள்ளிநாயகி(இலங்கை), இராமநாதன்(கனடா), சண்முகநாதன்(லண்டன்), தெய்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்திரா(கனடா), நாகராஜேஸ்வரி(லண்டன்), நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் 
அன்பு மைத்துனரும்,
 பரமேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற கணேசகுமாரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயலோகராஜா, பரமேஸ்வரன், இலக்‌ஷிமிகாந்தன், மஞ்சுளேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 30 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 10 Nov 2020 4:00 PM - 8:00 PMWednesday, 11 Nov 2020 11:00 AM - 8:00 PM
Bestattungsdienst Biaggi AG
Unterdorf 21, 5073 Gipf-Oberfrick, Switzerlandகிரியை Get DirectionThursday, 12 Nov 2020 8:30 AM - 11:00 AM
Krematorium Friedhof Meisenhard
Friedhof Meisenhard Aarauerstrasse 190, 4600 Olten, Switzerland
தொடர்புகளுக்கு
 சண்முகநாதன் - சகோதரர்Mobile : +447716461325   தெய்வநாயகி - சகோதரிMobile : +17169069955   இராமநாதன் - சகோதரர்Mobile : +14162939345   பரமேஸ்வரி - மைத்துனிMobile : +41787746416   அபீரன் - மகன்Mobile : +41786329067   அஜீர் - மகன்Mobile : +41794339845   சிவநாதன் - சம்மந்திMobile : +41763909771   பாலா - சம்மந்திMobile : +41797088122 


 

திங்கள், 9 நவம்பர், 2020

நாட்டில் தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் மக்களே அவதானம

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா 
தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது,
தற்பொழுது  கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது
 என பார்க்கும்பொழுது பொதுவாக வைரஸ் காய்ச்சல் எமது பிரதேசத்தில் காணப்படலாம் அடுத்ததாக டெங்கு காய்ச்சல் பொதுவாக தற்பொழுது ஏற்பட்டு கொண்டுவருகின்றது அடுத்ததாக  உண்ணி காய்ச்சல் என்ற ஒரு  பக்றீரியா காய்ச்சலும்  எலிக்காய்ச்சலும் காணப்படுகின்றது. காசநோய்க்குரிய காய்ச்சல் 
காணப்படுகின்றது
எனவே இந்த காய்ச்சல்கள் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை அறிந்து  எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் என்பன பற்றி அறிதல் மிக முக்கியமானது.
உண்ணி காய்ச்சல் தற்போது அதிகளவில் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலங்களில் அவதானித்தேன் பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது உண்ணி   காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பார்கள், வயல் வேலை செய்பவர்கள் தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவார்கள்.
அடுத்ததாக அறுவடைக் காலங்களிலும் அதிக அளவில் உண்ணி காய்ச்சலினால் பாதிக்கப்படுவார்கள்.
  உண்ணிகாய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுகின்றது இது பொதுவாக தெள்ளினால் பரப்பப்படுகின்றது. பொதுவாக எலிகள் அணில் நாய் பூனை மற்றும் மிருகங்களின் காணப்படலாம். 
தெள்ளு உடலில் கடித்து அந்த கிருமி உடலுக்குள் செல்வதால் இந்த நோய் ஏற்படுகின்றது இதன்போது காய்ச்சல் , உடல் நோ காணப்படும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சையினை நோயினை இனங்கண்டு உடனடியாக
 அளிக்கப்பட வேண்டும்
உண்ணி காய்ச்சலை இனங்கண்டபின் அவர்கள் தோட்டங்களில் வேலை செய்தவர்களா அல்லது வீடுகளில் மிருகங்களோடு பழகுபவர்களாக இருக்கிறார்களா என்ற விடயங்களை அறிந்த பின்னர் அவர்களுக்குரிய சிகிச்சையினை அளிக்க வேண்டும் 
மிருகங்களோடு பழகுபவர்களுக்கு  தொற்று ஏற்படுவது சாதாரணமாகும் அத் தோடு உடலில் தெள்ளு கடித்தகாயம் ஏற்படுமாயின் அந்த காயத்தின் ஊடாகவே இந்த கிருமி உடலுக்குள் செல்கின்றது இவற்றை அடையாளம் காண தவறும் இடத்தில் நோய் கடுமையாகி சில வேளைகளில் 
உயிரிழப்பும் ஏற்படலாம் 
ஆனால் நோய்க்கிருமிக்குரிய சிகிச்சை மிகவும் சுலபமானது வைரஸ் எதிர்ப்பு மருந்தை கொடுப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவே உண்ணி காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை உண்ணி காய்ச்சல் வரக்கூடிய சூழல் பொதுவாக தோட்டவேலை செய்பவர்களுக்கு அதிகமாக
 காணப்படுகின்றது.
அடுத்ததாக உடல் சுத்தம் மிக முக்கியமானது தினமும் அவர்கள் தோட்டத்துக்கு சென்று வந்து குளித்தல் அவசியமானது அத்தோடு ஆடைகளையும் தினமும் துவைத்து பாவிப்பதனால் உடலில் கிருமி தொற்றுதலை தவிர்க்கலாம்  உண்ணி காய்ச்சல் ஏற்படுவதை 
தவிர்க்கலாம் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 8 நவம்பர், 2020

பத்து மாதங்களில் ஓட்டமாவடியில் 348 பேருக்கு டெங்கு

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் ஏழாம் திகதி வரை 348 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணித்துள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் எம்.எச்.எம்
.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று 
வருகின்றது.
அந்தவகையில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல், டெங்கு புகை விசிறல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் தொடர்பில் டெங்கு ஒழிப்பு குழுவினருடனான கலந்துரையாடல் இன்று (08) வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 7 நவம்பர், 2020

உடுவிலில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; செய்தியறிந்த அம்மம்மாவும் மரணம்

யாழ்– உடுவில் பகுதியில்.07-11-20.  இன்று இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுய நினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மரணமடைந்துள்ளார். மரண செய்தியை அறிந்த அவரது அம்மம்மாவும் மரணமடைந்துள்ளார்.
இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் உடுவில், ஆலடியில் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன் (வயது-70) ஆகிய இருவருமே இவ்வாறு
 உயிரிழந்துள்ளனர்.
இளம் குடும்பத்தலைவரை அவரது மனைவி.07-11-20. இன்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து பேத்தியாரிடம் கூறியுள்ளார். அவர் 
திருநீறு பூசியுள்ளார்.
பின்னர் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை அறிந்த அதிர்ச்சியான பேத்தியாரும் மயங்கிச் சரிந்துள்ளார். அவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மரண விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

 < நிலாவரை.கொம் செய்திகள் >>> />>>




வெள்ளி, 6 நவம்பர், 2020

மரண அறிவித்தல் அமரர் கமலாம்பிகை சற்குணம் 05-11-20

 மறைவு : 05-11-20
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
கமலாம்பிகை சற்குணம்
அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி 
வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, 
பொன்னம்பலம் ஆகியோரின் 
அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரமூர்த்தி, 
பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, 
காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், 
ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னார். எமது ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா. வின் நிர்வாக உறுப்பினர் குகரூபனின் (ரூபன்)தாயரும் ஆவர்.
தொடர்புகட்க்கு. ரூபன்.(பிரித்தானியா) 0044 7900 004977 
.இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன.
தகவல் குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

வியாழன், 5 நவம்பர், 2020

சுழிபுரம் மத்தியில் வசிக்கும் மாணவி மூச்சடைப்பினால் தற்கொலை

தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.04-11-20.
நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு தாயார் வைத்தியசாலை 
செல்வோம் எனக் கூறியுள்ளார். எனினும் 
தயார் இல்லாத
 நேரம் பார்த்து, தவறான முடிவினை எடுத்துள்ளார். உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்.04-11-20. நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த போதும், மாணவி 
சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் 
இறப்பு விசாரணை 
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டது.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி 18 என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.குறித்த
 மாணவி சுழிபுரம் மத்தியில் வசித்து வருகின்றார். 
.04தொடர்ச்சியாக மேற்படி மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இதன் போது பாடசாலையிலும் மயங்கி 
வீழ்ந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 4 நவம்பர், 2020

நாட்டில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பு

குறிப்பிட்ட சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று (04) சற்றுமுன் வர்த்தமானி 
வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா – 94 ரூபாய்.
வெள்ளை மற்றும் சிவப்பு கெக்குலு சம்பா – 94 ரூபாய்.
நாட்டரிசி – 92 ரூபாய்.
சிவப்பு மற்றும வெள்ளை கெக்குலு – 89 ரூபாய்.
ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 நவம்பர், 2020

சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இளைஞன் பலி

புத்தளம் – அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி02-11.20. இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் குடிபோதையில் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என 
தெரிவிக்கப்படுகிறது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரணஅறிவித்தல் அமரர் பரமசாமி நடராஜா .02-11-20

மறைவு : 02-11-2020 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் பரமசாமி நடராஜா.(குமாரு)
அவர்கள் 02-11-2020.திங்கட் கிழமை இன்று   இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற பரமசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் 
பாசமிகு மகனும் 
சந்திரவதன.(மணி)அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பொன்னம்பலம் ,சரஸ்வதி ஆகியோரின் மருமகனும் காந்தரூபி (ரூபி ) கனடா.  அமுத கெளரி (கெளரி ) இலங்கை கிருபாகரன் (கிருபன் ) இலங்கை 
 ஆகியோரின் பாசமிகு தந்தையும்
 காலஞ்சென்ற செல்லம்மா சபாரத்தினம்  ஆகியோரின்  சகோதரும் ஆவார்.
    அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2020 புதன்கிழமை  அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்