siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 25 மே, 2024

நாட்டில் பேசாலையில் வாள்வெட்டு குடும்பஸ்தர் யாழ் வைத்தியசாலையில்

மன்னார் - பேசாலை முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்து, யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் கடந்த 22 -05-2024.ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 -05-2024.ஆம் திகதி 
பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
  என்பது குறிப்பிடத்தக்கது


வெள்ளி, 24 மே, 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா இராஜரத்தினம்

துயர் பகிர்வு--- உதிர்வு -22-05-2024 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்,,புலோலி வடக்கு கலைமன்ற வீதி,பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ,ஓய்வு பெற்ற பிரதித் திட்டப்பணிப்பாளர் திரு  கந்தையா இராஜரத்தினம் அவர்கள் .22-05-2024.  புதன்கிழமைஅன்று  இறைவனடி சேந்தார்
அன்னார் கந்தையா சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும் சுப்பிரமணியம் பொன்னம்மா  இந்திராணி
ஆகியோரின்  பாசமிகு சகோதரனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.05.2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது 
இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை பருத்தித்துறை இந்துமயணத்தில் நடைபெற்றது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்  . 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

வீட்டு முகவரி
புலோலி வடக்கு கலைமன்ற வீதி
,பருத்தித்துறை.


வியாழன், 23 மே, 2024

நாட்டில் கண்டி நோக்கி பயணித்த பேருந்துக்கு நேர்ந்தக் கதி சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரக்கிளை ஒன்று முறிந்து 
விழுந்துள்ளது. 
ஹட்டன்-கண்டிவார் பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில்.23-05-2024. இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை பேருந்து சபைக்கு சொத்தமான பஸ் வண்டியின் முன்னால் மரக்கிளை ஒன்று வீழ்ந்துள்ளது.
 இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்துள்ளதுடன், பயணிகளுக்கு பாதிப்பில்லை என
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது   


  


 

புதன், 22 மே, 2024

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு

நாட்டில்எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக்
 குறைக்கப்பட்டுள்ளது.
 நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 250.00 ரூபா, ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 450.00 ரூபா, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
 குறித்த பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய 
ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும்.22-05-2024.  இன்று புதன்கிழமை  முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 21 மே, 2024

யாழ் வாதரவத்தையை சேர்ந்த செல்வி சுதாகரன் சாருஜா இராணுவ வாகனம் மோதி உயிரிழப்பு

யாழ் வாதரவத்தையை சேர்ந்த செல்வி சுதாகரன் சாருஜா 
அவர்கள்.20-05-2024.அன்று  இராணுவ வாகனம் மோதி
 யுவதி உயிரிழப்பு இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் 20-05-2024.அன்று 
 இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனமொன்று வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.





 

திங்கள், 20 மே, 2024

இலங்கை ஜனாதிபதி ரணில் ஈரானிய ஜனாதிபதிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய 
அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க X செய்தியில் தெரிவித்துள்ளார்.
 "அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஈரான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
எங்களது பிரார்த்தனைகள் ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது பரிவாரங்களின் குடும்பத்தினருடன் இருக்கின்றன" என்று ஜனாதிபதி கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.



ஞாயிறு, 19 மே, 2024

வீடொன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது. 
கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 18 மே, 2024

நாட்டில் பல பகுதிளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  
கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது. 
இரத்தினபுரி மாவட்டத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை, ரம்புக்கன பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலக பிரிவுக்கு எச்சரிக்கை நிலை 2 இன் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது. 
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அபாய பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் 
விடுக்கப்பட்டுள்ளது.  
இந்த எச்சரிக்கை அறிவிப்பு.18-05-2024. இன்றுமாலை வெளியிடப்படும்.19-05-2024. நாளை  மாலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 17 மே, 2024

புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளதால் அமெரிக்காவில் நால்வர் மரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில், பலத்த புயல் காற்று வீசியது. 
இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் நின்ற மரங்கள் வேறோடு சரிந்தன. புயல் மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. 
இதனால் நேற்று இரவு சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
புயல் பாதிப்பு காரணமாக ஹூஸ்டன் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
ஹூஸ்டன் நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புயல் தாக்கியுள்ளது என்பதாகும் 





 

வியாழன், 16 மே, 2024

யாழ் தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது

யாழ் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது 
செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி 
பகுதியில் கடந்த 10ம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை 
செய்யப்பட்டார்.
கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த 
பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பதாகும்






 

புதன், 15 மே, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து அமெரிக்கா-புளோரிடாவில் எட்டு பேர் மரணம்

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  




 

செவ்வாய், 14 மே, 2024

இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கார் விபத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து.13-05-2024. அன்று  மாலை 
இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியால் வருகை தந்த நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் வாகனம் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்டது
இந்நிலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியூடாக புன்னாலைக் கட்டுவன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த நகைக்கடை உரிமையாளரின் மனைவி சந்தியை கவனிக்காது வாகனத்தை நேராக பயணிக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும் .



திங்கள், 13 மே, 2024

ஆண் ஒருவரின் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் சடலம் மீட்ப

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் பின் பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. 
மாங்குளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது








 

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை சருமத்தில் இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுகவும்

வெப்பமான காலநிலையுடன் இந்த நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் இந்திரா கஹாவிட்ட 
தெரிவித்துள்ளார்.  
சில தோல் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
கடுமையான வெயிலில் வெளிப்படும் பகுதிகளில் தோலில் அரிப்பு புள்ளிகள் ஏற்படலாம் என்றும் சிறு குழந்தைகளுக்கு முகத்தில், 
குறிப்பாக கன்னங்களின் மேல், கண்களைச் சுற்றிலும் கொஞ்சம் தாழ்வாக வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும் என்றும்
 அவர் கூறியுள்ளார். 
பூஞ்சை தொற்று பெரிய பிரச்சனையாக இருப்பதைப் பார்க்கிறோம். மருத்துவம் போன்றவற்றை எந்த வகையிலும் செய்யாதீர்கள். உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும்.  ஏனென்றால் இருக்கும் நோய்கள் 
அதிகரிப்பதைக் காணலாம்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 மே, 2024

நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாட்டில்பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்.11-05-2024. இன்று  மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த 
மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த 
மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 மே, 2024

யாழ் வல்வெட்டித்துறையில் இளம் பெண் தீக்குளித்து உயிர் மாய்த்தார்

யாழ் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளம்பெண் ஒருவர், 09-05-2024.அன்று இரவு தீக்குளித்து
 உயிரை மாய்த்துள்ளார்.
காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாகவே, குறித்த பெண் இத்தகைய விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக 
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.





 

வியாழன், 9 மே, 2024

யாழ் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக மற்றுமொருவர் மரணம்

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் 
பகுதியில் 08-05-2024.அன்று  குடும்பஸ்த.ர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார். 
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்  08-05-2024.அன்று மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். 
பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். 
அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள்
 மேற்கொள்ளப்பட்டது.  
அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில்
தெரியவந்துள்ளது. 
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம்.09-05-2024. இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.



புதன், 8 மே, 2024

நிலவும் வெப்ப அலையினால் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா
 தெரிவித்துள்ளார்
யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு 
தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான 
பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது "ஹீட் ஸ்ரோக்" ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். 
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை
 குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக 
பாதிக்கப்படும். 
மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் "ஹீட் ஸ்ரோக்" காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் 
உயிரிழப்புக்கு 
அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் 
காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
" ஹீட் ஸ்ரோக்" வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய
 நீராகாரங்களை வழங்க வேண்டும். வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள
 வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை
 தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே "ஹீட் ஸ்ரோக்" வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கதது







 

செவ்வாய், 7 மே, 2024

தெல்லிப்பழையில் தாயை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது

யாழ் தெல்லிப்பழையில் உயிரிழந்த பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து 4ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், 
நேற்றுக் காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதோடு போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் பதிவான சம்பவம் ஒன்றையடுத்து சிறுவர்களுக்கு திறன்பேசிகளைவழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார்
 அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு திறன்பேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கதது.






 

திங்கள், 6 மே, 2024

நாட்டில் செங்கலடி பிரதான வீதி சந்தி பஸ் விபத்தில் ஐவர் படுகாயம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.06-05-2024.
 இன்று அதிகாலை 1 மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற இ.போ சபைக்குச் சொந்தமான
 பஸ் வண்டியே இவ்வாறு செங்கலடி பகுதியில்
 விபத்துக்குள்ளாகியுள்ளது.
 விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சாரதியின் தூக்கக்கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த 
பஸ் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதுண்டு வீதியோரம் இருந்த கடைத் தொகுதியிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 விபத்தில் சாரதி மற்றும் நடத்துநர் உள்ளிட்ட ஐவர் செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான
 மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கதது 




 

ஞாயிறு, 5 மே, 2024

நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக 
கூறப்படுகிறது. 
இதன்படி  பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.   
இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே 
அதிகரித்துள்ளது.  
மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.  
30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் 
மாரடைப்புகளில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டுமென பத்மேந்திர விஜேதிலக்க
 மேலும் தெரிவித்தார்.





 

சனி, 4 மே, 2024

யாழ் ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 தாக்குதலுக்கான
 காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக
 அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது  


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 3 மே, 2024

நாட்டில் அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்

அம்பாறை ECC சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். 
குறித்த விபத்து சம்பவமானது  03-05-2024.அன்றுபிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் உள்பட 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அம்பாறையில் இருந்து நெய்தா நோக்கி பயணித்த பாடசாலை பஸ் ஒன்றும் அக்கரப்பற்றில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த லங்காம பஸ்ஸூம் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 
இந்த விபத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும்  குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது  





 

வியாழன், 2 மே, 2024

நாட்டில் நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை

நாட்டில்  சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் 
விலைகள் தொடர்பில்.02-05-2024. இன்று அறிவிக்கப்படும் என
 லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் 
முதித பீரிஸ் தெரிவித்தார். 
அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 1 மே, 2024

லண்டனில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மாணவர் ஒருவர் கைது

பிரித்தானியாவில் நேற்று (30.04) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய மாணவர் கைது
 செய்யப்பட்டுள்ளார். 
வடகிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட், டியூப் ஸ்டேஷன் அருகே நடந்த தாக்குதலில் 13 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பில் முன்னதாக 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது 17 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.