siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 16 மே, 2020

கடற்கரைக் கிராமக் கிணறுகள்.திடீரென வற்றிப் போகின்றன பீதியில் மக்கள்

கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதால் சுனாமி அபாயம் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லையென அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த
 அவர்,கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை.
 இது சாதாரணமானது, அபாய நிலமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. இந்நிலமை கடந்த ஆண்டும் ஏற்பட்டது. 
அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. தற்பொழுது தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.எனவே, மக்கள் வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாமென அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை பெறும் இலங்கை. 43 பேர் குணமடைவு

இலங்கையில் மேலும் 43 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட 935 பேரில் 177 கடற்படையினரும் குணமடைந்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 406 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 15 மே, 2020

அபாய எச்சரிக்கை .பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு

பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொவிட் -19 வைரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொவிட் -19 ஆபத்து பின் பக்க 
ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும். அத்துடன், பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.எனவே ஒரு கொவிட் -19 தொற்று நோயாளி பேருந்தில் 
இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் பேருந்தில் 
நின்றுக் கொண்டு சென்றால் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.பேருந்துககளில் ஆசனங்களின் 
எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்துச் சென்றால், அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மந்திகைப் யில் ஊரடங்கு வேளையில் வீதியில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மந்திகைப் பகுதியில் இன்று (15-05-20) அதிகாலை இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காவல் 
கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படை சிப்பாய் ஒருவரால் (15-05-20) இன்று அதிகாலை 1 மணிக்கு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் என்ற 22 வயது இளைஞன் கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில், படுகாயமடைந்து 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.மந்திகை
 வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் 
தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடிப்பட்டு காயமேற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞனை இராணுவத்தினர் இடைமறிக்கையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாகவும், இதன் காரணத்தால் தாம் துப்பாக்கி
 சூடு நடத்தியதாகவும், இராணுவத்தினர் 
தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி அம்புலன்ஸ் சேவையில் மந்திகை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 14 மே, 2020

தனது தலைமுடியைத் தியாகம் செய்த இலங்கை இளம் பெண்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி, அதனை புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு வழங்கியுள்ளார்.பல வருடங்களாக வளர்த்து பேணி காத்து வந்த தனது நீளமான தலை முடியை வெட்டியமை தொடர்பில் தனது பேஸ்புக் பக்த்தில் கருத்துத் 
தெரிவித்துள்ள அவர்;
புற்றுநோய் இது அந்நோயாளிக்கு மட்டுமல்லாது அவரது அன்புக்குரியவருக்கும் ஒரு பயமுறுத்தும், கொடூரமான, துக்ககரமான அனுபவமாகும். ஆம் .. அவர்களது வலியை எங்களால் நீக்க முடியாதுதான் ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணமாவது 
அவர்களை மகிழ்விக்க முடியும். எனவே, 
நான் எனது தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். அது என்னை விட அவருக்கே அதிகமாக தேவைப்படும். பெண்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு
 விடுக்கிறேன். நீங்கள் ஒரு உங்கள் முடியை வெட்ட நினைத்தால், அதனை தூக்கி எறிய வேண்டாம். தயவுசெய்து, அதை
 தேவையானவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவும். நன்றி ‘ இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 13 மே, 2020

பணபரிமாறலை கையடக்க தொலைபேசி மூலம் செய்வோருக்கு எச்சரிக்கை

கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 12 மே, 2020

யாழ் பண்ணைக் கடலுக்குள் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க பாய்ந்த சிறுவன்

தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனை பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை 
 பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான்.எனினும், கடற்படையினர் விரைந்து செயற்பட்டு 
அந்தச் சிறுவனை நீண்ட தூரம் நீந்திச் சென்று பிடித்து வந்தனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில்.12-05-20. இன்று மாலை இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
 சம்பவத்தில் வேலணை – வெள்ளைக்கடற்கரை (சாட்டி) பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதான சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை 
மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனைக் கைது செய்ய உதவிப்பரிசோதகர் முயற்சித்துள்ளார்.இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த
 சிறுவன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார்.அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று 
சிறுவனை கரைக்குக் கொண்டு வந்ததை அடுத்து, சிறுவனை 
கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.பொலிஸாரின் விசாரணைகளில் தனக்கு போதை 
மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து சாட்டி பகுதிக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் 
மேலும் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 11 மே, 2020

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மொத்தமாக 343 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை 
விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை
 நாட்டில் இதுவரை 863 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசலைகளில் 511 பேர் சிகிச்சை 
பெற்று வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 10 மே, 2020

அம்பாறையில் பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற குழியொன்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே/கிழக்கு 3ஆம் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்ற நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடயவியல் துறையினர் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.உயிரிழந்த
 சிறுவர்களின் தாயார் சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், வேறு சிறுவர்கள் பட்டம் விடுவதைப் பார்ப்பதற்காகச் சென்ற நிலையில் சிராஜ் சிபாம் (வயது-6) சிராஜ் ரிஸ்ஹி (வயது-3) ஆகிய சிறுவர்களே குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் வீட்டிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
.இவ்வாறு உயிரிழந்த சிறுவர்களின் தந்தை வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடோன்றில் பணிபுரிந்து வருகின்றார்.இதேவேளை, சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை 
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை
 பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எமு.நெளபீர் தலைமையில் இன்று காலை சென்ற குழுவினர் அம்பாறையில் இருந்து வருகைதந்த தடயவியல் பொலிஸாருக்கு
 ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் வீழ்ந்த கிணறு மற்றும் சுற்றுச்சூழலில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 8 மே, 2020

அமரர் இராசரத்தினம் இலட்சுமி (பரிமளம்)1ம் ஆண்டு நினைவஞ்சலி.12,05,20

மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019  
திதி -12..05.2020 செவாய் கிழமை அன்று 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 
அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னார்  காலஞ்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம்    
சின்னத்துரை, பேத்தச்சி - மற்றும் பார்க்கியம் ஆகியோரின்  
அன்புச்சகோதரியும்  
 வசந்தகுமார்    மலர்வதான  சுகந்தி   ஆகியோரின் அன்புத் தாயாரும் , 
சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  ஆகியோரின் அன்புப் பேத்தியம் ஆவார்
அன்னாரின்  1ம்ஆண்டு நினைவஞ்சலி  12-05-2020 அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில்   ஓர்ஆண்டு   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளை    
. தகவல் குடும்பத்தினர் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 7 மே, 2020

அகாலமரணம் திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்) 07-05-20

பிறப்பு-17 12-1968-இறப்பு-07 05-2020
யாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)  அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்
அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சாவித்திரி தம்பதிகளின்
 அன்பு மருமகனும், சர்மிலா(சசி) அவர்களின் 
அன்புக் கணவரும், அஸ்வினி, அஜிதன்,
அகிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிறேமதாசன்(பிரான்ஸ்), சிவயோகதாசன்(இலங்கை), சுகியதாசன்(இலங்கை), ரசியதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருந்தினி, டகிபிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஆனந்தி, சுமதி, யசோ, கலாவதி, 
கானன், வினோதன், ஊர்மிலா, புலோமினா,
 விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுபா, சேகர், குமார், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
 கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சர்மிலா - மனைவிPhone : +41438113836 சேகர் - சகலன்Mobile : +41794835969   தாசன் - அண்ணாMobile : +33622818685   ரசி - தம்பிMobile : +33751262003   யோகம்மா - தாய்Mobile : +94759262588   சாவித்திரி - மாமிMobile : +94769101730  

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 6 மே, 2020

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வடக்கில் சுகாதார சேவையின் அறிவுறுத்தல்கள்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.நீண்டநாட்களாக அமுலில் இருந்த 
ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகைஅலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) 
அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை தங்களது 
சிகை அலங்கரிப்பு நிலையங்களில் அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒருமீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
முடிதிருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்,முடிதிருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய சேவையினை நிறைவு செய்தபின் கைகளை 
சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு கழுவிய பின்பே அடுத்த வாடிக்கையாளருக்குரிய சேவையை 
வழங்க வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 5 மே, 2020

கொழும்பு. ராஜகிரிய கொரோனா ஆபத்து நிறைந்த பிரதேசமாக மாற்றம்

கொழும்பு ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு நகருக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் ஆபத்து அதிகரித்துள்ளது.பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இந்த பிரதேசத்தில்.05-05-20. இன்று காலை 
விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன் வைரஸ் தொற்றியவர்கள் இருக்கின்றனரா என்பதை தேடி 
வருகின்றனர்.அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நபருன் பழகிய நபர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு
 அழைத்துச் செல்ல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசமானது, முன்னர் கொரோனா நோயாளிகள் பலர் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க 
மாவத்தை போன்று சன நெருக்கடி நிறைந்த பிரதேசமாகும்.பண்டாரநாயக்க மாவத்தையை அடுத்து பண்டாரநாயக்கபுரவுக்கு 
மாறிய கொரோனா வைரஸால் இந்த பிரதேசத்தில் மேலும் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்பதால், அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

கொரோனா தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு 15-ஐ சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார 
அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் எனவும் சுகாதார அமைச்சு 
அறிவித்துள்ளது.இந்நிலையில் 
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 52 வயதுடைய கொழும்பு 15 ஐ சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 3 மே, 2020

துடரிக்குளம் பகுதியில் இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு
 (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கிணற்றில் வீழ்ந்ததினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து
 அவரை மீட்டெடுத்து 
வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
 செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்த நபராவர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பளையில் காணாமல் போன மாணவன் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி 
நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை 
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி, பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு 
காணாமல் போயிருந்தார். இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ஆம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.குறித்த மாணவன், பளை தர்மக்கேணி 
அ.த.க பாடசாலையில் கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவர் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மாணவனுடைய பெற்றோர் கடந்த சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் அவரைத் தேடியும் கண்டறியப்படாத நிலையில் 
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில், பொலிஸாரும் மாணவனைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 மே, 2020

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

இலங்கை-ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மார்ச் 17ம் திகதி கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என 
ஏப்ரல் 17ம் திகதி அன்று வீடு திரும்பினார்.இதன் பின்னர் திடீரென 02-05-20 இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நோயாளி பி.சி.ஆருக்கு 
மீண்டும் பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு 
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் முத்துதம்பி இரத்தினசிங்கம் 29.04.20

உதிர்வு, -29. 4. 2020.
யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக. கொண்ட
முத்துதம்பி இரத்தினசிங்கம் அவர்கள்   29. 4. 2020. அன்று காலமானார் இவர். காலம்சென்ற முத்துத்தம்பி தங்கச்சிப்பிள்ளை. அவர்களின் சிரேத்தபுத்திர்ரும். வதனலோயினின் அன்புக்கணவரும். யசோதா. தீபா. அவர்களின் அன்புத் தந்தையும். குலசிங்கம். காலம்சென்ற பாலசிங்கம். மற்றும்ஞானேசுவரி(றாணி)இறாயேந்திரம்அவர்களின்பாசமிகுசகோதர்ரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: 
ஞானேசுவரி(றாணி ). (905)9469413
வீட்டு முகவரி 
தோப்பு -அச்வேலி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 29 ஏப்ரல், 2020

பொல்பித்திகம வில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில்

பொல்பித்திகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணொருவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று
 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 134 பேர் குணமடைந்து
 வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக
 சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 481 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் சட்டத்தை 
மீறுபவர்கள் குறித்து பொலிஸ் பாதுகாப்பு படையினரும் விழிப்புடன், இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன 
தெரிவித்துள்ளார்.எப்படியிருப்பினும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் பிரதேசத்தில் உள்ள 
மக்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்தியாவசியம் அல்லது 
அவசிய நடவடிக்கைகளுக்காக பயணிக்கும் நபர்களுக்கு இந்தச் சட்டம் தாக்கம் செலுத்தாது என பிரதி பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.புதிய முறையின் ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முழுமையான நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>