siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 8 பிப்ரவரி, 2021

நாட்டில் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் 
தெரிவித்துள்ளார்.
இதனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் 
தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

மட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் 
ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு 
தலைமையக காவல்துறையினர் 
தெரிவித்தனர்.குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய
 தகவலையடுத்து காவல்துறையினர்
 இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை.இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அரியாலை நாவலடியில் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு பலி

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம்-07-02-2021. இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





சனி, 6 பிப்ரவரி, 2021

கந்தளாயில் லொறியுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

திருகோணமலை - கந்தளாய் தலைமையக காவல் துறை   பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் 
உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று (5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய்  காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர்.
அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த சேனக்க திஸாநாயக்க 43 வயதுடைய வாய்பேச முடியாத ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தளாய் தலைமையக காவல் துறையினர்  மேற்கொண்டு வருவதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 4 பிப்ரவரி, 2021

புத்தளத்தில் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த 12 வயது பாடசாலை மாணவி

புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் 
உயிரிழந்துள்ளார்.
புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மலீஷா என்ற 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 3 பிப்ரவரி, 2021

இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள்

இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது
.நாட்டில் கடந்த 29ம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 23 ஆயிரத்து 217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மன்னார் வீதியில் கனரக வாகனத்துடன் மோதிய உந்துருளி விபத்து..இளைஞன்பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றதுஇன்று காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற இந்த விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார 
பணி உதவியாளராக கடமாற்றும் அடம்பன் பகுதியை
 சேர்ந்த ரி.எம். சல்மான் வயது-29 என்பவரே 
உயிரிழந்துள்ளார்.உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும்,அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக 
பயணித்த மோட்டார் சைக்கிளும் மேதியே விபத்து ஏற்பட்டுள்ளது.இதன் போது 
படுகாயம் அடைந்த குறித்த இளைஞன், அடம்பன் பிரதேச
 வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
 உயிரிழந்தார்.சம்பவ 
இடத்திற்கு சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து 
வீடு நோக்கி செல்லும் போதே, குறித்த விபத்து
 இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெற்றியை களனி கங்கையில் கொண்டாடிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

களனி கங்கையில் குளிப்பதற்காக சென்ற 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் மாலை களனி கங்கையின் நவகமுவ, மாபிட்டிகம
 பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றுக் காலை 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 1 பிப்ரவரி, 2021

நாட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான 06 ஆம் வகுப்பு நடவடிக்கை பிற்போடப்பட்டது

 நாட்டில் 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு பிற்போட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை 
அதி கரிக்க முடியுமா என்பதை இந்த மாதத்திற்குள் தீர் மானிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேரா சிரியர் கபில பெரேரா
 தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் போது அவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெற்றோர் உட்பட ஏனையோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கபில பெரேரா
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல், அமரர் நாகலிங்கம் செல்வநாயகம் 01-02-2021

பிறப்பு-  22-08-1942 -  இறப்பு--01-02-2021,    
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் நாகலிங்கம் செல்வநாயகம் .(ஓய்வுபெற்ற இலங்கைபோக்குவரத்து சபை பேருந்து   நடத்தினர் )  
அவர்கள் 01-02-2021.திங்கட் கிழமை இன்று   இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்  தம்பதிகளின் 
பாசமிகு மகனும் 
(கொண்டக்கடர் )  பஸ் நடத்தினர் விசயதேவி .(ராசாத்தி )அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற  வேலுப்பிள்ளை ,சரஸ்வதி ஆகியோரின் மருமகனும்   சுதாயினி (சுதா )இலங்கை  
 ஆகியோரின் பாசமிகு தந்தையும்
 காலஞ்சென்ற மங்களம்  விஸ்வரத்தினம் , ஆகியோரின்  சகோதரும் ஆவார்.,தங்கமுத்து,பாக்கியம் காலஞ்சென்ற  ராசு ,மனோன்மணி ரத்தினம்,
ஆகியோரின்,,ஒன்டவிட்ட  சகோதர்கள்  ஆவார்
காலஞ்சென்ற மணி ,குணபாலன் ,தவம் மற்றும் ஆத்தை,குட்டான் , சுந்தரலிகம் ஆகியோரின்,மைத்துனரும் ஆவர் 
    அன்னாரின் இறுதிக்கிரியை,02-02-2021. செவ்வாய்க்கிழமை  அன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செட்டிகுளத்தில் விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்

விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு!!திங்கள் பெப்ரவரி 01, 2021
செட்டிகுளம் நகர் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி  (01.01.2021)இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 01.01.2021.இன்று உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராஜ்குமார் வயது 54 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளார்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தடுப்பூசி இன்று வடக்கில் 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிப்பு

வட மாகாணத்தில் COVID-19 தடுப்பூசி இன்று 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இன்று, யாழ்ப்பாணம் – 875, மன்னார் – 200, வவுனியா – 210, முல்லைத்தீவு – 145, கிளிநொச்சி – 100 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 15% வடக்கு சுகாதார பணியாளர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர். நேற்றும் இன்றுமாக- இரு நாட்களும் 45% பணியாளர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.தடுப்பூசி செலுத்தும் பணி நாளையும் தொடரும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழில் .கணவனின் முன்பாக தனக்குத் தானே தீமூட்டி மனைவி மரணம்..

குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதுயாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான 
நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினைத் தொடர்ந்து, கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய 
கணவன் தீயை அணைத்து, மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஏக்கல பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வான் கோர விபத்து..மூவர்பலி

கொழும்பு – மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது;
வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 48, 49, மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப
 கட்ட தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 30 ஜனவரி, 2021

தஹம்வௌ பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மீட்பு

பொலனறுவை–மெதிரிகிரிய–தஹம்வௌ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி மரணித்த இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் குறித்த பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இன்று அதிகாலை குறித்த சட்டவிரோத மின்சார கம்பி இணைப்பில் சிக்கி இறந்த நிலையில்,இரண்டு 
காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக 
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்ற நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 29 ஜனவரி, 2021

திருக்கேதீஸ்வரம்பகுதில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி இருவர் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை .29-01-2021.இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 
மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார்-யாழ்ப்hணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம 
அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக 
சட்ட விரோதமான முறையில் அமைத்த 
மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.இன்று வெள்ளிக்கிழமை (29) காலை குறித்த இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை 
அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு 
வந்தனர்.பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.பின்னர் சடலம் மீட்கப்பட்டது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



கொழும்பில் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசித் திட்டம் இன்று ஆரம்பம்..

 

இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை,29-012021. இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ
 வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய
 வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்சம் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி ஆனந்தராஜா உதயராணி 29.01.21

பிறப்பு-01-02-1976  இறப்பு-29.-01-2021
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும்,  சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா உதயராணி அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின்
 அன்பு மகளும், இராமன் கிட்டிணன், காலஞ்சென்ற நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கிட்டிணன் ஆனந்தராஜா
 அவர்களின் அன்பு மனைவியும்,அஸ்மிதா, அபிஷகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பூபதி, செல்வக்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சந்திரகுமார், சிவகுமார், ஜீவகுமார், இந்திரகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் 
அன்புச் சகோதரியும்,சந்திரகுமார், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஜயலட்சுமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற விஜயராணி, மகேந்திரம், ஆனந்தஈஸ்வரன், ஆனந்தஸ்ரீ, 
ஆனந்தகுமார், மோகன் ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,வடிவேலு, சிவசக்தி- சுபைதினி, நிரஞ்சினி, அசோதியா, நிவேதா, நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனுஷன், அனக்தீஸ், வதீஸ், வஜிதன், வரதராஜா, வதீசா, மது, கல்பா ஆகியோரின் அன்பு மாமியும்,பிரியா, ஆர்த்தி, கீர்த்தி, டிலக்சியா, அபிஷன், அஸ்வின், தனுஷன், விதுஷன், மதுஷன் மற்றும் பிரமா 
ஆகியோரின் அன்பு சித்தியும்,மைதிலி, வசந்தரூபன், லக்சியா, யதுசா ஆகியோரின் பெறா மகளும்,றம்மியா, யதுசன், அனித்தா, சாரங்கன், றாதுசன், ஜெதுசன், தனுசன், லக்சுமன், டிலக்சன்,
 சபிதா, கஸ்ரியா, மதுசன், நவீன், மகதி, துசியந்தன், சிறிகரன், சியானுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் 
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

புதன், 27 ஜனவரி, 2021

வெல்லாவெளியில் டிப்பர் கண்ணாடியை உடைத்த மரக்கிளை. சாரதி.பலி

 

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மரத்தின் கிளையொன்று குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.
27-01-2021,இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.மண் ஏற்றும் டிப்பர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டிச்சென்று சிறிய
 வீதியொன்றின் ஊடாக செலுத்த முற்பட்டபோது, மரமொன்றின் கிளை வானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு,சாரதியின் நெஞ்சுப்பகுதியை தாக்கியுள்ளது.
இதன்போது வானத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது வாகனத்தில் சென்ற 
உதவியாளர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,களுவாஞ்சிகுடி 
சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.மரண விசாரணையினை 
தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 26 ஜனவரி, 2021

தமிழ் மொழிக்கு யாழ் நகரில் நேர்ந்த கதி..பொதுமக்கள் கடும் விசனம்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு
 தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.குறித்த
 விடையம் தொடர்பில் 25-01-2021.அன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>