திருகோணமலை பகுதியில் பெறுமதியான தொலைபேசியொன்றினை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜமாலியா, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த மாதம் திருகோணமலை பகுதியில் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தொலைபேசி ஒன்றினை திருடி பாவித்து வந்த நிலையில், தொலைபேசியின் உரிமையாளர் திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் முறைபாடு
செய்துள்ளார்.
திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தொலைபேசி
பரிவர்த்தனை நிலையத்துடன் தொடர்பு
கொண்டு தகவல்களை பெற்று குறித்த நபரை அலைபேசியுடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்துள்ளார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக