யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது ன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை
ஏற்பட்டுள்ளது.
யாழ்- வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குறித்த வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள்
தீயில் எரிந்துள்ளது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.
8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே குறித்த தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கராஜ் உரிமையாளர் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் இரண்டை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில்,
பெரும் சத்தம் கேட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது 8 பேர் முகமூடியுடன் வீட்டின் முன்னாள் நின்றுள்ளனர். குறித்த கும்பல் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்
சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,
"முச்சக்கரவண்டிகள் இரண்டும் தீ பற்றி எரிந்துள்ளன. இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வாளால் வெட்டப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு வீட்டின் கண்ணாடிகள்
உடைக்கப்பட்டன.
நான் எவருடனும் எந்த பிரச்சினைளுக்கும் செல்வதில்லை. யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்தனெரென்றும் தெரியாது" என வீட்டு
உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக