11 வயது சிறுமி ஒருவர் 14,11,2018, புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்
சவுக்கடியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சிசா என்ற சிறுமியே
காணாமல் போயுள்ளார்
குறித்த சிறுமி வழமைபோல சவுக்கடியிலுள்ள தனது வீட்டில் இருந்து மயிலம்பாவெளியிலுள்ள விபுலானந்தர் பாடசாலைக்கு இன்று காலை 7.00 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றவர் பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலை முடிவடைந்தும் வீடு திரும்பாததையடுத்து பெற்றோர்
அவரை தேடிச் சென்றனர்.
இருந்தபோதும் குறித்த சிறுமி பாடசாலைக்கு வரவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளதுடன் சிறுமி துவிச்சக்கர வண்டியடன் காணாமல் போயுள்தாக பொலிஸாரல் தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள்
தெரிவிக்கின்ன்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக