அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பகுதியை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.இதனையடுத்து இது அடுத்த சில
நாட்களில் இலங்கையின் வானிலையில் பாதிப்புக்கள் இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இந்த
மழைவீழ்ச்சி 50 மி.மீ வரை
பதிவாகலாம். எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து
வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த
சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக