siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 நவம்பர், 2020

பலத்த காற்று..முல்லையில் பாடசாலையில் சரிந்து வீழ்ந்த பாரிய மரம்

நிவர் புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கே முல்லை மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசபாடசாலையொன்றில்.25-11-20. இன்று காலை பாரிய மரமொன்று சரிந்து 
வீழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. பாடசாலை வளவில் நின்ற பாரிய மரமே சரிந்து வீழ்ந்தள்ளதெனினும் அருகிலுள்ள
 பாடசாலைக் கட்டிடங்களுக்கு சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.முல்லை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் முன்கூட்டியே குறித்த 
இடங்களிலிருந்து வெளியேறி விட்டதால், நிவர் புயலினால் வரப்போகும் சேதங்களை தவிர்க்க முடிந்துள்ளதாக
 மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.எவ்வாறெனினும், முல்லை மற்றும் வடக்கு மாகாண மக்கள் இப்புயல் தொடர்பில் தொடர்ந்து 
மிகவும், விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக